71 எம்பிக்களின் சொத்து 286 சதவீதம் உயர்வு: பா.ஜ எம்பி ரமேஷ் சந்தப்பா நம்பர் 1

புதுடெல்லி: மக்களவை எம்பிக்களின் சொத்து மதிப்பு குறித்து ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம்(ஏடிஆர்) ஆய்வு மேற்கொண்டது. அதன் விவரம் வருமாறு: 2009ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரையிலான காலத்தில் மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட 71 எம்பிக்கள் சொத்து மதிப்பு 286 மடங்கு உயர்ந்துள்ளது. இதில் கர்நாடகாவை சேர்ந்த பா.ஜ எம்பி ரமேஷ் சந்தப்பா ஜிகாஜினாகி நம்பர் 1 இடத்தை பெற்றுள்ளார். 2009ல் அவரது சொத்து மதிப்பு ரூ.1.18 கோடியாக இருந்தது. 2014ல் ரூ.8.94 கோடியாகவும், 2019ல் ரூ.50.41 கோடியாக அதிகரித்தது. இது 4189 சதவீத உயர்வு ஆகும். இவர் தொடர்ந்து 6 முறை பிஜப்பூர் தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2016 ஜூலை முதல் 2019 வரை ஒன்றிய குடிநீர் வளத்துறை இணை அமைச்சராக இருந்துள்ளார்.

2வது இடத்தையும் கர்நாடகாவை சேர்ந்த பா.ஜ எம்பி பிசி மோகன் பிடித்துள்ளார். பெங்களூரு மத்திய தொகுதியில் இருந்து போட்டியிட்டு வென்ற அவரது சொத்து மதிப்பு 2009ம் ஆண்டு ரூ.5.37 கோடியாகவும், 2019ல் ரூ.75.55 கோடியாகவும் உயர்ந்தது. இது 1306 சதவீதம் அதிகம் ஆகும். இதே போல் வருண்காந்தி எம்பியின் சொத்து மதிப்பு 2009ல் ரூ.4.92 கோடி. 2019ல் ரூ.60.32 கோடி. சிரோன்மணி அகாலிதளம் எம்பி ஹர்சிம்ரத் கவுர் பாதல் சொத்து மதிப்பு 2009ல் ரூ.60.31 கோடி. 2019ல் ரூ.217.99 கோடி. தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்பி சுப்ரியா சுலே சொத்து மதிப்பு 2009ல் ரூ.51.53 கோடி. 2019ல் ரூ.140.88 கோடி.

Related Stories: