ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தல் 2023-ல் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஆதரவு

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தல் 2023-ல்  மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் திருமகன் ஈவெரா ஜனவரி 4ஆம் தேதி உயிரிழந்தார். இந்த தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதேபோல மார்ச் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும், வேட்புமனு தாக்கல் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.

 

இந்நிலையில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தல் 2023-ல்  மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். நடைபெறவிருக்கும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு பின்வரும் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் மாநில நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

*அகில இந்திய பார்வர்ட் பிளாக் (தமிழ் மாநிலக்குழு), (மாநில பொதுச்செயலாளர், தேசிய துணைத்தலைவர் பி.வி.கதிரவன், முன்னாள் எம்.எல்.ஏ.)

*தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் (குலாலர்) சங்கம் (மாநிலத் தலைவர் டாக்டர் சேம.நாராயணன்)

* அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம் (நிறுவனர், பொதுச்செயலாளர் - சே.பசும்பொன்பாண்டியன்)

* இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட்டெவலப்பர்ஸ் நிலதரகர்கள் நலச் சங்கம் (அகில இந்திய தலைவர் - விருகை வி.என்.கண்ணன்)

* தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் அனைத்து தொழில் பிரிவு தொழிலாளர்கள் மனித உரிமை பாதுகாப்பு சங்கம் (பொதுச்செயலாளர் எம்.கோவிந்தராஜ்)

* அருந்ததியர் மக்கள் நலச் சங்கம் (நிறுவனர், தலைவர் வேடவாக்கம் சி.சீனிவாசன்) ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Related Stories: