மோட்டார் வாகன சட்டப்படி சரியாக இல்லாத நம்பர் பிளேட் 27,891 வாகனங்கள் மீது வழக்கு

சென்னை: மோட்டார் வாகன சட்டம் 50 மற்றும் 51ன் படி வாகனங்களுக்கு பதிவு எண்கள் தகடுகளின் அளவு மற்றும் பதிவு எண்கள் தகடுகளில் தலைவர்கள் படங்கள், வாசகங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர காவல் எல்லையில் கடந்த 31 மற்றும் 1ம் தேதிகளில் போக்குவரத்து போலீசார் அதிரடியாக மாநகரம் முழுவதும் 150க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, முறையான பதிவு எண்கள் இல்லாத வகையிலும், கவிதைகள் எழுதப்பட்ட வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர், மோட்டார் வாகன சட்டப்படி முறையான பதிவு எண்கள் இல்லாத 11,784 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்தனர். அதேபோல், கடந்த 24 மற்றும் 25 தேதிகளில் மாநகரம் முழுவதும் நடந்த சோதனையில் 16,107 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்தனர்.  அந்த வகையில் மாநகரம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் பதிவு எண்கள் இல்லாத 27,891 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்து ள்ளனர்.

Related Stories: