போஸ்டல் லைப் இன்சூரன்சுடன் எதை இணைக்க வேண்டும்?

சென்னை: அஞ்சல் பாலிசி வைத்திருப்பவர்கள் ஆதார் எண், மொபைல் எண் மற்றும் மின்னஞ்சலை பாலிசியுடன் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று தலைமை அஞ்சல் துறை அதிகாரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: அஞ்சல் துறை பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது. அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம் குறைந்த பிரீமியம் மற்றும் உயர்போனஸ் அளிக்கிறது. பாலிசிதாரருக்கு சிறந்த சேவையை உறுதி செய்ய போஸ்டல் லைப் இன்சூரன்ஸ் பாலிசி வைத்திருப்பவர்கள் ஆதார் எண், மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஆகியவற்றை, சென்னை பொது அஞ்சலகத்தில் உள்ள அஞ்சல் ஆயுள் காப்பீடு பிரிவை அணுகி, மேலும் விவரங்களுக்கு 044-25212549 மற்றும் cpmchennaigpo@indiapost.gov.inதங்கள் பாலிசியுடன் இணைத்துக் கொள்ள வேண்டும்.

Related Stories: