ராமர் சிலை செய்ய நேபாளத்தில் இருந்து அயோத்தி வந்த பாறை: சிறப்பு பூஜை செய்து வழிபாடு

அயோத்தியா: அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் கருவறையில் வைக்கப்பட இருக்கும் ராமரின் மூலவர் மற்றும் சீதை சிலைகளை செதுக்குவதற்கான அரியவகை பாறைகள் இரண்டு நேபாளத்தில் இருந்து கொண்டு வரப்பட்டன. நேபாளத்தில் உள்ள முஸ்டாங்க் மாவட்டத்தில் இருந்து கடந்த 25ம் தேதி புறப்பட்ட 600 ஆண்டு பழமை வாய்ந்த, 26 மற்றும் 14 டன் எடை கொண்ட 2 அரியவகை பாறைகளை விசுவ இந்து பரிசத் இயக்கத்தினர் கொண்டு வந்தனர். இந்த பாறைகள் நேற்று மதியம் ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த 51 வேத விற்பன்னர்களும் அவற்றை வணங்கி வழிபட்டனர். இவற்றை நேபாளத்தில் உள்ள ஜானகி கோயிலை சேர்ந்த மகந்த் தபேஸ்வர் தாஸ் எடுத்து வந்து, ராமர் அறக்கட்டளையின் பொது செயலாளர் சம்பத் ராயிடம் காட்டினார். இந்த பாறையில் இருந்து செதுக்கப்படும் `பால ராம’ரின் சிலை அடுத்தாண்டு ஜனவரி மாதத்துக்குள் தயாராகி விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: