நாகாலாந்தில் காரில் ரூ.1 கோடி வைத்திருந்த பெண் கைது

கோகிமா: நாகலாந்து சட்டமன்றத்துக்கு வரும் 27ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலையொட்டி, தேர்தல் கண்காணிப்பு குழுவினர் கார், பைக் உள்ளிட்ட அனைத்து வாகனங்களை சோதனை தீவிர செய்து வருகின்றனர்.இந்நிலையில், மணிப்பூர் எல்லையில் உள்ள இரு மாநிலங்களின் செக் போஸ்ட் பகுதியில் மணிப்பூரில் பதிவு செய்யப்பட்ட காரில் ஒரு பெண் வந்தார். அந்த காரை நிறுத்தி கண்காணிப்பு குழுவினர் சோதனை செய்தனர். அப்போது அதில் ரூ.1 கோடி பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரூ.1 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். ஏதாவது அரசியல் கட்சிக்கு கொடுப்பதற்காக இந்த பணத்தை அவர் கொண்டு வந்தாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: