தீவிரவாதியாக மாறிய அரசு பள்ளி ஆசிரியர் கைது

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதியாக மாறிய அரசு பள்ளி ஆசிரியரை போலீசுார் கைது செய்தனர். ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆண்டு மே மாதம்  வைஷ்ணவி தேவி கோயிலுக்கு பக்தர்கள் சென்ற பேருந்து மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் நான்கு பேர் உயிரிழந்தனர். 24 பேர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி ஆரிப்பை போலீசார் கைது செய்தனர். இவர் அரசு பள்ளி ஆசிரியராக இருந்து தீவிரவாதியாக மாறியது தெரியவந்துள்ளது. பக்தர்கள் சென்ற பேருந்து குண்டு வெடிப்பு மட்டுமின்றி பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களில் இவருக்கு தொடர்புள்ளதும் தெரியவந்தது.

Related Stories: