2019ம் ஆண்டு முதல் 21 வெளிநாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்: ரூ.22.76 கோடி செலவு

புதுடெல்லி: பிரதமர் மோடி கடந்த 2019 முதல் இப்போது வரை 21 வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார். இதற்காக ரூ.22.76 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி. முரளீதரன் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: 2019ம் ஆண்டு முதல் பிரதமர் மோடி 21 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார். இந்த பயணங்களுக்காக ரூ.22 கோடியே 76 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. கடந்த 2019 முதல், பிரதமர் ஜப்பானுக்கு 3 முறையும், அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 2 முறையும் சென்றுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த 2019ம் ஆண்டு முதல் 7 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார். தற்போதைய ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த ஆண்டு செப்டம்பரில் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டார். ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணங்களுக்காக ரூ.6,24,31,424 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு முதல் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 86 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார். இதற்காக ரூ.20,87,01,475 ரூபாய் செலவாகியுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: