உடுக்கை அடித்து ஓட்டு சேகரிக்கும் குடுகுடுப்பை கோவிந்தன்

சேலம் மாவட்டம், கெங்கவல்லி ஒன்றியம், உலிபுரம் ஊராட்சியை சேர்ந்தவர் கோவிந்தன் (41). திமுக தலைமை கழக பேச்சாளர். கட்சியில் குடுகுடுப்பை கோவிந்தன் என்றால் தெரியாத ஆட்களே இல்லை. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக கை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு பெரியார் வீதி, வளையக்கார வீதி, மரப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் குடுகுடுப்பைக்காரன் வேடமணிந்து வீடு வீடாக சென்று உடுக்கை அடித்து அவர் ஓட்டு கேட்டார். வித்தியாசமான தோற்றத்தில் வாக்கு சேகரித்த கோவிந்தனுக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. அவர் கூறுகையில், ‘‘தொடர்ந்து 25ம் தேதி வரை வீதிவீதியாக உடுக்கை அடித்தபடி ஓட்டு சேகரிக்க உள்ளேன்’’ என்றார்.

Related Stories: