பள்ளி மாணவர்கள் மோதல்; கல்வீச்சு

பண்ருட்டி: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே புதுப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்2 படிக்கும் மாணவர்கள் இடையே நேற்று தகராறு ஏற்பட்டது. இதில் கற்களை கொண்டு மாணவர்கள் ஒருவரையொருவர் பயங்கரமாக தாக்கி கொண்டனர். வெளியூர் பள்ளியில் இருந்த மாணவர்களை அழைத்து வந்த மோதலில் ஈடுபட்டனர். இதில் 2 மாணவர்கள் காயம் அடைந்தனர். தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீசார் பள்ளிக்கு வந்து சமாதானம் செய்து வைத்தனர். மாணவர்களின் தகராறு வீடியோ வைரலாகி வருகிறது.

Related Stories: