தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கி பெண்ணுக்கு கொலை மிரட்டல் அதிமுக நகர செயலாளர் கைது

சத்தியமங்கலம்: தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கி பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த அதிமுக நகர செயலாளர் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம், புஞ்சைபுளியம்பட்டி அதிமுக நகர செயலாளராக இருப்பவர் ஜி.கே.மூர்த்தி (49). இவருக்கு மனைவி, மகன் மற்றும் மகள் உள்ளனர். இவர் மீது புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கீதா (39) என்பவர் புஞ்சை புளியம்பட்டி போலீசில் அளித்த புகாரில், கணவரை பிரிந்து கடந்த 3 ஆண்டாக மூர்த்தியுடன் குடும்பம் நடத்தி வந்தேன். எனது நடத்தை மீது சந்தேகப்பட்டு அவர் என்னை கடுமையாக தாக்கியதில் முதுகு, கழுத்து ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டது. மேலும் என தலை முடியை பிடித்து தெருவில் இழுத்து சென்று கொலை மிரட்டல் விடுத்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இதையடுத்து 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்த போலீசார் அதிமுக நகர செயலாளர் மூர்த்தியை நேற்று காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்து சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.

Related Stories: