சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.2,900 கோடி கடனுதவி

சென்னை: மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.2,900 கோடி கடனுதவி வழங்கியுள்ளது. சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில் 118.9 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. உயர்மட்டப்பாதை, சுரங்கப்பாதை, மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் 40க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதிய மெட்ரோ ரயில் வழித்தடங்களை உருவாக்க ஆசிய மேம்பாட்டு வங்கி ஒப்புதல் அளித்து சுமார் 780 மில்லியன் டாலர் மதிப்பிலான பல அடுக்கு நிதியுதவி திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதன்படி ஒப்பந்தத்தில் ஒன்றிய நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் கூடுதல் செயலர் ரஜத் குமார் மிஸ்ரா மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி அதிகாரி நிளயா மிடாஷா அண்மையில் கையெழுத்திட்டனர்.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, முதல் தவணையாக ரூ.2,900 கோடி கடனுக்கு ஒப்புதல் அளிக்க உள்ளது. இந்த கடன் மூலம் வழித்தடம் 4 மற்றும் 5ல் சுரங்கப்பாதை பணிகளையும் உயர்மட்ட மேம்பால பணிகளையும் மேற்கொள்ள மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Related Stories: