காஞ்சி ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் கருத்தரங்கம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த கீழம்பியில் உள்ள காஞ்சி ஸ்ரீ  கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பிபிஏ துறை சார்பில்  ”புதுமை மற்றும் தொழில்முனைவும்” எனும் தலைப்பில் கருத்தரங்கம்   நேற்று நடந்தது.  அறக்கட்டளை நிறுவனர்  பா.போஸ் தலைமை தாங்கினார். தாளாளர் அரங்கநாதன், கல்லூரி தலைவர் சாய்ராம், செயலாளர் மாதவன், பொருளாளர் பிரதீப்குமார் மற்றும் இயக்குனர்கள் முன்னிலை வகித்தனர்.  கல்லூரி முதல்வர் கு.வெங்கடேசன் வரவேற்று பேசினார்.

இதில், சென்னை ஆசான் மேலாண்மையியல் கல்வி நிறுவனத்தின்  உதவி பேராசிரியர் டி.ஜெய்சித்ரா  கலந்துகொண்டு  ”தொழில் முனைவோருக்கான நவீனத்துவம்” எனும் தலைப்பில் இன்றைய காலகட்டத்தில்  தொழில்முனைவோருக்கான வசதி வாய்ப்பு, வியாபார நுணுக்கங்கள், நவீனமயமாக்கல், வேலை வாய்ப்பு  குறித்து புரஜக்டர் மூலம் திரையில் காண்பித்து  மாணவர்களுடன் கலந்துரையாடினார். இதில், பிபிஏ துறை தலைவர் ச.வெங்கடேசன்,  துணை முதல்வர் ம.பிரகாஷ், உதவி பேராசிரியர்கள் கே.பிரியா, கே.பிரேமா, எ.பேபி, சி.காஞ்சனா உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டனர். முடிவில், உதவி பேராசிரியர் நாகவேலு நன்றி கூறினார்.

Related Stories: