ஐஎஸ்எல் கால்பந்து போட்டி; சென்னை - ஒடிசா அணிகள் இன்று மோதல்

சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னை நேரு விளையாட்டரங்கில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எப்சி  ஒடிசா எப்சி அணிகள் மோதுகின்றன. ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இதுவரை 15 போட்டிகளில் ஆடி உள்ள சென்னையின் எப்சி 4 வெற்றி, 5 டிரா, 6 தோல்விகளுடன் 17 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.  பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமென்றால் எஞ்சியுள்ள 5 ஆட்டங்களிலும் கணிசமான வெற்றிகளை பெற வேண்டும் என்ற நெருக்கடியில் சென்னையின் எப்சி அணி உள்ளது. காயத்தில் இருந்து குணமடைந்துள்ள நெதர்லாந்தை சேர்ந்த நாசர் எல் கயாதி இன்றைய ஆட்டத்தில் களமிறங்க உள்ளார்.

நடுகள வீரரான அவர், இந்த சீசனில் 8 ஆட்டங்களில் 7 கோல்கள் அடித்துள்ளார். இன்றைய போட்டியிலும் அவர் தனது திறனை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை எப்சி அணியின் தலைமை பயிற்சியாளர் தாமஸ்பிரடாரிக் கூறும்போது, “ஒடிசா அணிக்கு எதிரான இன்றைய ஆட்டம் மிகவும் முக்கியமானது. அபாயகரமான ஆட்டம் எனக்கு பிடிக்கும். கால்பந்து விளையாட்டில் தாக்குதல் ஆட்டம் எப்போதுமே அபாயகரமானதுதான். எல்கயாதி முழு உடற்தகுதியை அடைந்துவிட்டார். இன்றைய ஆட்டத்தில் அவர், முக்கிய பங்காற்றக்கூடும்” என்றார்.

Related Stories: