சென்னை அம்பத்தூரில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம்மில் ரூ.200-க்கு ரூ.500 வந்ததால் பரபரப்பு..!!

சென்னை: சென்னை அம்பத்தூரில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம்மில் ரூ.200-க்கு ரூ.500 வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வழக்கமாக ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.100,ரூ.200,ரூ.500 நோட்டுகளை அடுக்கி வைப்பதத்திற்கு தனித்தனி டிரேக்கள் வழங்கப்பட்டிருக்கும் அதில் அந்த ஊழியர்கள் அவ்வாரே பணத்தை நிரப்புவார்கள் அதில் குளறுபடி ஏற்பட்டதாக தெரிகிறது. சென்னை அம்பத்தூர் பழைய டிடிஎச் சாலையில் உள்ளது இந்தியன் வங்கி அதே கட்டிடத்தில் ஒரு ஏடிஎம் உள்ளது. இன்று காலை வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்காக ரூ.200 எடுக்க முயன்றபோது, மாறாக ரூ.500 வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வாடிக்கையாளர் ஒருவர் ஏடிஎம்மில் ரூ.8,000 பணம் எடுக்க முயன்ற போது ரூ.20,000 வந்ததால் வங்கி நிர்வாகம் அதிர்ச்சி மற்றொரு வாடிக்கையாளர் ஏடிஎம்மில் ரூ.8,000 எடுக்க முயன்றபோது அவருக்கும் ரூ.20,000 வந்துள்ளது. ஏடிஎம்மில் 200 ரூபாய் நோட்டு வைக்க வேண்டிய டிரேவில் ரூ.500 வைத்ததால் கூடுதல் பணம் வந்ததாக வங்கி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஏடிஎம்மில் கூடுதலாக வந்த பணத்தை, வாடிக்கையாளர்கள் திருப்பி ஒப்படைத்ததாகவும் வங்கி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: