நாகாலாந்து சட்டமன்றத் தேர்தலில் 20 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி போட்டி

கோஹிமா: நாகாலாந்து சட்டமன்றத் தேர்தலில் 20 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிடுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

நாகாலாந்து மாநில தேர்தலையொட்டி ஒன்றிய தேர்தல் குழு நியமனம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் பாஜக மூத்த தலைவர்கள் நேற்று ஆலோசனையில் ஈடுப்பட்டனர்.

டெல்லியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நடப்பாண்டில் மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா, கர்நாடகம், மிசோரம் உள்ளிட்ட 9 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நாகாலாந்து சட்டமன்றத் தேர்தலில் 20 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிடுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.   

நாகாலாந்தில் தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சியுடன் என்.டி.பி.பி கூட்டணி அமைத்து பாஜக களம் காண்கிறது என தகவல் வெளியாகியுள்ளது. நாகாலாந்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் என்.டி.பி.பி. கட்சி 40 இடங்களில் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Related Stories: