அதானி குழுமத்தால் வங்கிகளுக்கு பாதிப்பு, அதானி குமத்துக்கு வழங்கப்பட்ட கடன் விவரத்தை தெரிவிக்க ரிசர்வ் வங்கி உத்தரவு..!!

டெல்லி: அதானி குழும நிறுவனங்களில் செய்த முதலீடு, தந்த கடன் விவரங்களை வழங்குமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. பங்குகள் விலை சரிவை தொடர்ந்து ரூ.20,000 கோடி தொடர் பங்கு வெளியீட்டையும் நேற்று அதானி திரும்பப் பெற்றார். அதானி குழும நிறுவன பங்குகள் 6-வது நாளாக வீழ்ச்சியடைந்துள்ளன. அதானி குழும நிறுவனங்கள் மீதான புகார்களை தொடர்ந்து கவுதம் அதானி உலக பணக்காரர்கள் வரிசையில் 15-வது இடத்திற்கு சரிந்துள்ளார்.

அதானி குழும நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையால் அதானி குழும பங்குகள் 6-வது நாளாக பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சியடைந்த நிலையில் ஆணையிடப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களில் அதானி என்டர்பிரைசஸ் பங்கு விலை 41 சதவீதம் அதாவது ரூ.1,338 சரிந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் அதானி என்டர்பிரைசஸ் பங்கு விலை 50% அதாவது ரூ.1909 குறைந்து ரூ.1932-ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு மாதத்துக்கு முன்பு ரூ.3841-ஆக இருந்த அதானி என்டர்பிரைசஸ் பங்கு விலை முப்பதே நாளில் ரூ.1932-ஆக சரிந்துள்ளது. பங்குகளின் விலை சரிவை சந்தித்ததால் பங்கு விற்பனையை அதானி எண்டர்பிரைசஸ் நிறுத்தி வைத்துள்ளது.

Related Stories: