வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 4 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தும் முதலமைச்சர்: அரசின் திட்டப் பணிகள் குறித்து கேட்டறிந்தார்..!!

வேலூர்: வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். கள ஆய்வில் முதலமைச்சர் என்ற புதிய திட்டத்தை  முதலமைச்சர் ஆலோசனை இன்று வேலூர் மாவட்டத்தில் தொடங்கி வைத்துள்ளார். அதன் ஒருபகுதியாக வேலூர் மண்டலத்துக்கு உட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்ட ஆட்சியர்களுடன் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் 4 மாவட்ட ஆட்சியர்களுடன், அனைத்து துறை அரசு அதிகாரிகள் மற்றும் தலைமை செயலாளர் இறையன்பு, உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். முதலமைச்சரின் கள ஆய்வில் கிடைத்த தகவல் அடிப்படையில் திட்ட செயல்பாடுகள் குறித்து ஆட்சியர்களுடன் ஆலோசனை நடைபெறுகிறது.

குடிநீர், சுகாதாரம், கல்வி, மருத்துவம், குழந்தைகள் ஊட்டச்சத்து, இளைஞர் திறன் மேம்பாடு பற்றி முதல்வர் ஆய்வு செய்கிறார். மக்களின் கோரிக்கை மனுக்கள் குறித்தும், நிலுவையில் உள்ள புகார் மனுக்கள் குறித்தும், மனுக்கள் மீது எடுத்த நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்தும் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார். ஆலோசனை கூட்டத்தில், விரைந்து தீர்க்கவேண்டிய பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் மாவட்ட ஆட்சியர்கள் செயல்பட வேண்டும், பொதுமக்களின் பிரச்சனைகளை விரைவாக தீர்க்கும் வகையிலும் மாவட்ட ஆட்சியர்கள் செயல்பட வேண்டும் என்ற ஆசோசனையும் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Related Stories: