அம்பத்தூர்: கோயில் கடையை உள்வாடகைக்கு விட்டதால் பூட்டி சீல் வைக்கப்பட்டது. வில்லிவாக்கத்தில் அகத்தீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான சொத்துகள் மேற்குமாடவீதியில் 13767 சதுர அடியும் ராஜா தெருவில் 2200 சதுர அடியும், ரெட்டி தெருவில் 5424 சதுர அடி, சென்னை, திருவள்ளூர் நெடுஞ்சாலையில் 1275 சதுரஅடி என மொத்தம் 22,666 சதுர அடியில் மனைகள் உள்ளன.
இதில் உள்ள கடைகள் 5 பேருக்கு இந்து அறநிலையத்துறை சார்பில் வாடகைக்கு விடப்பட்டிருந்தது. ஆனால், வாடகைக்கு எடுத்தவர்கள் முறையாக வாடகை செலுத்தவில்லை. கோயில் சார்பில் வழங்கிய நிலத்தை உள்வாடகைக்கு விட்டு பணம் சம்பாதித்ததாகவும் கூறப்படுகிறது. எனவே, சென்னை மண்டலம்-2 அதிகாரிகளின் உத்தரவின்படி, சம்பந்தப்பட்ட கடை நேற்று பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.20 கோடி என கூறப்படுகிறது.