புதுச்சேரியில் அமெரிக்க பெண் பலாத்காரம்

புதுச்சேரி: அமெரிக்காவின் நியூஜெர்சி, ஷெர்ரிவெல் பகுதியை சேர்ந்தவர் 64 வயது பெண். இவர் கடந்த ஜனவரி முதல் வாரத்தில் சுற்றுலா விசாவில் இந்தியா வந்தார். பின்னர் புதுச்சேரி, சுய்ப்ரேன் வீதியிலுள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தார். இவர், புதுச்சேரி புஷ்சி வீதியில் உள்ள விடுதி அறையில் கடை வைத்துள்ள காஷ்மீரை சேர்ந்த மெஹராஜ் பட் (34) என்பவரிடம் உல்லன் துணிகள் வாங்கியுள்ளார். இதில் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இன்றுடன் (பிப்.2) விசா முடிவதால், மீண்டும் தாய்நாடு திரும்புவதற்காக நேற்று முன்தினம் விடுதி அறையை காலி செய்வதற்கு உதவும்படி மேஹராஜ்பட்டை அவர் அழைத்துள்ளார். அப்போது அவருக்கு மேஹராஜ்பட் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட அவர் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் அவர் அளித்த புகாரின்படி ஒதியஞ்சாலை போலீசார், பலாத்கார பிரிவின்கீழ் (376) வழக்குபதிந்து மேஹராஜ்பட்டை தேடி வருகின்றனர். அதேசமயம் அந்த பெண் இன்று சொந்த ஊர் திரும்புவதற்காக சென்னை சென்றார்.

Related Stories: