கலைஞரின் பேனா சின்னத்தை சீமான் உடைத்தால் எங்கள் கை பூ பறித்து கொண்டிருக்குமா? அமைச்சர் பி.கே.சேகர்பாபு கேள்வி

சென்னை: கடலில் வைக்கப்படும் கலைஞரின் பேனா சின்னத்தை, உடைப்பேன் என்கிறார் சீமான். அதுவரை எங்கள் கை என்ன பூ பறித்து கொண்டிருக்குமா என்று அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பி உள்ளார். சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கங்காதீஸ்வரர் கோயிலின் ராஜகோபுரம், சுற்றுப்பிரகாரம், கருங்கல் பதிக்கும் பணி, மின் பணி, நந்தவனம் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘புரசைவாக்கத்தில் உள்ள கங்காதீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு உண்டான அனைத்து பணிகளும் 8 மாதங்களுக்குள் முடிந்து, இந்த ஆண்டு இறுதிக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும்.

திமுக ஆட்சியில், கோயில்களுக்கு உபயதாரர்கள் மூலமாக ரூ.600 கோடி வரை நன்கொடை வந்துள்ளது. தைப்பூசத்தை முன்னிட்டு, தேர் பவனி வரும் பழனியில், 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, தமிழ்நாட்டில் உள்ள 44 கோயில்களில் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது.

வரும் 26ம்தேதிக்குள் 34 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மெரினா கடற்கரையில், கலைஞரின் நினைவாக பேனா சின்னம் அமைக்கப்பட்டால், அதனை உடைப்பேன் என சீமான் பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டத்தில் கூறினார். அவர், பேனா சின்னத்தை உடைக்கும் வரை, எங்கள் கைகள் என்ன பூ பறிக்குமா என கூறினார். மேலும் எந்த, கோயில்களில் பணியாளர் பற்றாக்குறை உள்ளதோ, அங்கு பணியாளர்கள் அமர்த்துவதற்கான வேலை நடைபெற்று வருகிறது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ், இதுவரை 38 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது”என்றார்.

Related Stories: