அதானி குழுமம் ரூ.17 லட்சம் கோடி மோசடி செபி, ஆர்பிஐ விசாரிக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

சென்னை: மதிமுக பொது செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் முதலீட்டு ஆய்வு நிறுவனம், கடந்த வாரம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. கருப்புப் பண ஒழிப்பு பற்றி பேசும் ஒன்றிய பாஜ அரசு, தனக்கு நெருக்கமான நிறுவனத்தின் இந்த சட்டவிரோதச் செயல்களைப் பார்த்து கண்ணை மூடிக் கொண்டு இருக்கிறதா. இந்த குற்றச்சாட்டுகளை பெயரளவில் விசாரிக்காமல் முழுமையாக செபி விசாரிக்குமா. அதானி குழுமத்தின் பங்கில் 8 சதவீதத்தை, அதாவது ரூ.74,000 கோடி பங்குகளை எல்ஐசி வைத்துள்ளது. மேலும், அதானி குழுமத்தின் கடனில் 40 சதவீதத்தை ஸ்டேட் பேங் ஆப் இந்தியா வங்கி வழங்கி உள்ளது.எனவே, பொதுநலன் கருதி இந்திய பங்குச்சந்தை ஒழுங்கமைப்பான செபி மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியவை உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

Related Stories: