பாட்டி, தந்தை மரணம் குறித்து ராகுல் பேச்சு: தியாகத்துக்கும், விபத்துக்கும் வித்தியாசம் உள்ளது! பாஜக அமைச்சரின் சர்ச்சை விளக்கம்

டேராடூன்: இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரின் இறப்பு குறித்து ராகுல்காந்தி கூறிய கருத்துக்கு, விபத்துக்கும், தியாகத்திற்கும் வித்தியாசம் உள்ளது என்று பாஜக அமைச்சர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காஷ்மீரில் நடைபயணம் மேற்கொண்ட போது பேசுகையில், ‘எனது பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜீவ் காந்தி ஆகியோரின் இழப்பு வலியை நன்றாக உணர்ந்துள்ளோம். அவர்கள் தியாகம் செய்தனர். ஆனால் எங்களின் வலியை பாஜக புரிந்து கொள்ளாது’ என்று கூறினார்.

இந்நிலையில் உத்தரகாண்ட் மாநில பாஜக அமைச்சர் கணேஷ் ஜோஷி, ராகுல் காந்தியின் கருத்து குறித்து அளித்த பதிலில், ‘விபத்துக்கும், தியாகத்திற்கும் வித்தியாசம் உள்ளது. ராகுல் காந்தி கூறிய கருத்தை நினைத்து பரிதாபப்படுகிறேன். தியாகம் என்பது அவர்கள் குடும்பத்தின் உரிமை அல்ல. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது பகத்சிங் உள்ளிட்ட பல தலைவர்கள் உயிரிழந்தது தான் தியாகங்கள்; ஆனால் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோருக்கு நடந்தது விபத்து; எனவே விபத்துக்கும், தியாகத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் ராகுல்காந்தி கருத்தை தெரிவித்துள்ளார்’ என்று கூறினார். இவரது இந்த கருத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Related Stories: