உணவு விஷயத்தில் அலட்சியம் காட்டக்கூடாது குழந்தைகளின் உடல்நலம், கல்வியில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்-ஆய்வு செய்த கலெக்டர் உத்தரவு

திருப்பதி : புத்தூரில் உள்ள குருகுல பள்ளியில் ஆய்வு செய்த போது உணவு விஷயத்தில் அலட்சியம் காட்ட கூடாது. குழந்தைகளின் உடல்நலம், கல்வியில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று கலெக்டர் வெங்கடரமணா உத்தரவிட்டுள்ளார்.திருப்பதி மாவட்டம், நாயுடுபேட்டை அடுத்த புதூரில் உள்ள சமூக நல பெண்கள்  குருகுல பள்ளியில் கலெக்டர் வெங்கடரமணா நேற்று மதியம் திடீரென ஆய்வு  மேற்கொண்டார். அப்போது, மாணிகளின் தினசரி உணவு மெனுவை சரிபார்த்தார்.

பின்னர், மாணவிகளுக்கு மதிய உணவை வழங்கினார்.தொடர்ந்து, அவர் பேசியதாவது: மெனுவின் அடிப்படையில் குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை வழங்க வேண்டும்.

மாணவிகளின் உணவு விஷயத்தில் அலட்சியம் காட்ட கூடாது. பள்ளியின் தூய்மையை மேம்படுத்த வேண்டும். மாணவிகள் அனைவருக்கும் ஹீமோகுளோபின் பரிசோதனை செய்ய வேண்டும். ரத்தசோகையால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய வேண்டும்.

இதனை பாதிக்கப்பட்டவர்களுக்கு முட்டை, கடலைப்பருப்பு போன்ற கூடுதல் உணவுகளை மருத்துவ சுகாதார பணியாளர்கள்  வழங்க வேண்டும். சில மாணவர்களுக்கு ஹீமோகுளோபின் பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவ பணியாளர்கள் தொடர்ந்து குருகுல பள்ளிகளுக்கு சென்று குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளின் உடல்நலம் மற்றும் கல்வியில் சிறப்பு கவனம் செலுத்த  வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

Related Stories: