மத்திய பிரதேசம் மது கடைகளில் கோசாலைகளை தொடங்க போகிறேன்: உமா பாரதி ஆவேசம்

போபால்: மத்திய பிரதேசத்தில் புதிய மது கொள்கையை விரைவில் அறிவிக்காவிட்டால் மது கடைகளில் கோசாலைகளை தொடங்குவேன் என பா.ஜ.க.வை சேர்ந்த உமா பாரதி ஆவேசத்துடன் கூறியுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், போபால் நகரில் அயோத்தியா நகர் பகுதியில் உள்ள அனுமன் மற்றும் துர்கா கோவிலுக்கு அக்கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் முதல் மந்திரியான உமா பாரதி சென்றுள்ளார்.

கோவிலுக்கு முன்னால் மதுக்கடை ஒன்று அமைந்து உள்ளது, இதுபற்றி உமா பாரதி கூறும்போது, அழிக்கப்பட வேண்டிய ஒன்று மது கடை முன்னால் உள்ளது. ஆட்சி அதிகாரம் பெறுவதற்கான காரணியாக உள்ள ஒன்று பின்னால் கோவில் உள்ளது என கூறியுள்ளார். கோவிலுக்கு முன்னால் மது கடையும், பாரும் உள்ளது என ஆவேசத்துடன் அவர் கூறினார்.

முதல் மந்திரி என்னிடம் ஜனவரி 31ம் தேதிக்குள் புதிய மது கொள்கை அறிவிக்கப்படும் என கூறினார். அந்த கொள்கைக்காக நான் இன்னும் காத்து கொண்டிருக்க முடியாது. மதுக்கடைகளில் நாளை மறுதினம் கோசாலைகளை தொடங்க போகிறேன். தேர்தலில் வெற்றி பெறுவது என்பது பெரிய விசயம் கிடையாது. மக்களுக்கு சேவை செய்வதும், அவர்களது பிரச்சனைகளை கேட்டு தீர்ப்பதுமே அதன் நோக்கம் ஆகும் என கூறியுள்ளார்.

Related Stories: