செய்யாறு அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கலை நிகழ்ச்சிகளுடன் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்-நன்கொடையாளர்களை கவுரவித்த எம்எல்ஏ

செய்யாறு : செய்யாறு அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பொன்விழா ஆண்டு நேற்று கொண்டாடப்பட்டது. இதில், நன்கொடையாளர்களை எம்எல்ஏ ஒ.ஜோதி கவுரவித்தார்.

செய்யாறு நகரில் உள்ள  அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி பொன்விழா ஆண்டு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் நேற்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு செய்யாறு மாவட்ட கல்வி அலுவலர் ஏ.எல்லப்பன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை எம்.உமாமகேஸ்வரி வரவேற்றார்.

பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எம்.ரவிக்குமார், பள்ளி வளர்ச்சி குழு தலைவர் எம்.சின்னத்துரை, முன்னாள் மாணவியர் சங்க தலைவர் மெய்.பூங்குவதை, பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஏ.தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில்  சிறப்பு அழைப்பாளர்களாக எம்எல்ஏ ஒ.ஜோதி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதிசீனிவாசன், நகரமன்ற உறுப்பினர் கே.விஸ்வநாதன், முன்னாள் நகரமன்ற தலைவர் என்.சம்பத், நகரமன்ற துணைத் தலைவர் குல்சார், ஒன்றிய குழு தலைவர்கள் (செய்யாறு) என்.வி.பாபு, (வெம்பாக்கம்) டி.ராஜி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற எம்எல்ஏ ஒ.ஜோதி பொன்விழா ஆண்டையொட்டி பல்வேறு உதவிகளை வழங்கிய நன்கொடையாளர்களுக்கு நினைவு பரிசு வழங்கி சால்வை அணிவித்து கவுரவித்து பேசியதாவது: வரலாற்றுச் சிறப்பு மிக்க பொன்விழா காணுகின்ற இந்த பள்ளியிலே கலந்து கொள்வதில் பெருமை படுகிறேன். இப்பள்ளியானது மறைந்த போற்றுதலுக்குரிய பெரியவர் சபாநாயகராக இருந்த புலவர் கோவிந்தன் அவர்களுடைய முயற்சியால் இப்பள்ளி தொடங்கப்பட்டு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரால் அடிக்கல் நாட்டப்பட்டு, அவருடைய மனைவியார் தயாளு அம்மையார் கரங்களால் பள்ளி ஆரம்பிக்கப்பட்டு இன்று பொன்விழா ஆண்டாக கொண்டாடப்படுகிறது.

மேலும், உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற திட்டத்தில் இப்பள்ளிக்கு ₹7 கோடியில் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்படவுள்ளது. மாதா, பிதா, குரு தெய்வம் என சொல்வதைப் போல் நம்முடைய வாழ்க்கைக்கு அடித்தளமிடும் குருவை என்றைக்கும் மறக்கக்கூடாது. அதேபோல் படித்த பள்ளிக்கும், நம்மை வளர்த்த சமுதாயத்திற்கும் என்றும் உறுதுணையாக இருந்திட வேண்டும்’ என்றார்.

நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற மாவட்ட கல்வி அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பள்ளி நிர்வாகிகள் ராஜலட்சுமி, அண்ணாதுரை, ராஜ்குமார், நசீர், சிவகுமார், பேபி ராணி, சையத் பாஷா, சித்ரா, ரத்தினமாலா, சரோஜா மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி வளர்ச்சி குழு மற்றும் மேலாண்மை குழு நிர்வாகிகள் பெற்றோர்கள், மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியை இ.விஜயலட்சுமி நன்றி கூறினார்.

Related Stories: