நகை திருடிய வேலைக்கார பெண் கைது

சென்னை: மந்தைவெளி லாசர் சர்ச் சாலையை சேர்ந்தவர் சண்முகநாதன் (81). இவரது வீட்டு பீரோவில் இருந்த 11 சவரன் நகைகள், ரூ.15 ஆயிரம் மட்டும் மாயமாகி இருந்தது. எனவே, வீட்டில் வேலை செய்யும் பெண் ஜானகி மீது சந்தேகம் உள்ளதாக சண்முகநாதன் கடந்த 29ம் தேதி பட்டினப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.

போலீஸ் விசாரணையில், 8 மாதங்களாக சண்முகநாதன் வீட்டில் வேலை செய்ததும், பீரோவில் இருந்து சிறுக சிறுக நகை, பணத்தை திருடியதாக ஜானகி ஒப்புக்கொண்டார். ராஜா அண்ணாமலைபுரம் கே.வி.பி. கார்டன் பகுதியை சேர்ந்த ஜானகி (37) என்பவரை கைது செய்தனர். 11 சவரன் நகைகள் மீட்கப்பட்டது.

Related Stories: