புழுதிவாக்கம் வைகை தெருவில் பைப் லைன் உடைந்து வீணாகும் குடிநீர்

ஆலந்தூர்: புழுதிவாக்கம் வைகை தெருவில் பைப் லைன் உடைந்து, அப்பகுதி முழுவதும் குடிநீர் ஆறாக பாய்வதால் குடிநீர் வீணாகிறது. சென்னை மாநகராட்சி, பெருங்குடி மண்டலம், 186வது வார்டுக்கு உட்பட்ட ராம்நகர் வடக்கு பகுதியில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று மெட்ரோ குடிநீர் வாரிய ஊழியர்கள், வைகை தெருவில், மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, திடீரென குடிநீர் பைப்லைன் உடைத்து, அப்பகுதி முழுவதும் குடிநீர் ஆறாக பாய்ந்தது.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், மழைநீர் கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் தண்ணீர் தேங்கி சாலை மட்டத்திற்கு ஓடுகிறது. இதனால், அந்த வழியாக நடந்து செல்பவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மாற்று பாதையில் செல்லக்கூடிய சூழ்நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட மெட்ரோ குடிநீர் வாரிய அதிகாரிகள் மெத்தனப் போக்கை கைவிட்டு, அப்பகுதி பொதுமக்களின் நலனை கருதி,  உடைந்த பைப் லைனை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என  வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories: