ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் ரூ.3.5 லட்சம் கொள்ளை

அண்ணாநகர்: முகப்பேர் மேற்கு ஐஸ்வந்த் நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (40), ரியல் எஸ்டேட் அலுவலகம் நடத்தி வருகிறார். நேற்று காலை அவரது அலுவலகத்தின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர், செந்தில்குமாருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர். அலுவலகத்துக்கு விரைந்து வந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.3.5 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.இதுகுறித்து,  செந்தில்குமார்  நொளம்பூர் போலீசில்  புகார் கொடுத்தார்.

போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர். மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், இரண்டு பைக்குகளில் முகமூடி அணிந்து வந்த 4 பேர் ரூ.3.5 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. இதன் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து, கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: