சென்னை: ஒழுங்கா வேலையப் பாருங்கள் என்று ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் அறிவுரை வழங்கினார். படப்பிடிப்புக்காக நடிகர் ரஜினிகாந்த் டெல்லி சென்று, அங்கிருந்து மற்றொரு விமானத்தில் நேபாளத்துக்கு செல்வதை அறிந்த ரசிகர்கள் சிலர், சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்தனர். ரஜினிகாந்த் காரை விட்டு இறங்கி விமான நிலையத்திற்குள் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது ரசிகர்கள் சிலர், ‘சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்க’ என்று கோஷமிட்டனர். உடனே வேகமாக சென்று கொண்டிருந்த ரஜினி நின்று, ரசிகர்களை அழைத்து ஒழுங்காக சென்று, உங்கள் வேலையை பாருங்கள் என்று கூறிவிட்டு விமான நிலையத்திற்குள் சென்றார். ஆனாலும் ரசிகர்கள் அவர் பின்னாலே தொடர்ந்து சென்றனர். ரஜினி உள்ளே செல்லும் முன்பு நின்று ரசிகர்களை பார்த்து இருகரம் கூப்பி வணக்கம் கூறிவிட்டு உள்ளே சென்றார்.