பெண் சீடர் பலாத்காரம் சாமியார் ஆசாராம்பாபுவுக்கு ஆயுள்தண்டனை: குஜராத் நீதிமன்றம் தீர்ப்பு

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தை சேர்ந்த பிரபல சாமியார் ஆசாராம் பாபு. வயது 81. அகமதாபாத் புறநகரில் உள்ள இவரது ஆசிரமத்தில்  சூரத் நகரை சேர்ந்த ஒரு பெண்  சீடராக இருந்தார். கடந்த 2001ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டுவரை சாமியார் ஆசாராம் பாபு, தன்னை பல தடவை பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த 2013ம் ஆண்டு போலீசில் புகார் செய்தார்.  இந்த வழக்கில்  ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பு அளித்து உள்ளார். ஆசாராம் பாபு கடந்த 2013ல் சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் ஆயுள்தண்டனை பெற்று தற்போது ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள சிறையில் இருக்கிறார்.

Related Stories: