கொல்கத்தாவில் 9 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் திவால் நடவடிக்கையின் கீழ் உள்ள செரி(SERI) இன்ப்ராஸ்ட்ரக்சர் பைனான்ஸ் லிமிடெட் மற்றும் செரி எக்யூப்மென்ட் பைனான்ஸ் லிமிடெட் ஆகிய இரண்டு அமைப்புக்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினார்கள். இந்த இரண்டு அமைப்புக்களும் நிதி முறைகேடு மற்றும் சட்டவிரோத பரிவர்த்தனையில் ஈடுபட்ட புகாரின்பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டது. அலிபோரா, டாங்ரா, ஆனந்த்பூர் உட்பட 9 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. சோதனை நடந்த இடங்களில் துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். 50 முதல் 60 அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

Related Stories: