வனப்பகுதியில் பதுங்கியிருந்த 4 லஷ்கர் தீவிரவாதிகள் கைது

அவந்திபோரா: ஜம்மு - காஷ்மீரின் அவந்திபோராவில் உள்ள ஹஃபு நவிபோரா வனப்பகுதியில் லஷ்கர்-இ-தொய்பா (எல்.இ.டி) தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய நான்கு தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து வெடிபொருட்கள், ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்களை பாதுகாப்பு படையினர் மீட்டனர். முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட நான்கு பேரும் லஷ்கர் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்பதும், அவர்கள் பல்வேறு சதித் திட்டங்களில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

Related Stories: