சிறப்பாக பணிபுரிந்த 10 காவல் அதிகாரிகள், ஆளிநர்களை நேரில் அழைத்து சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார் காவல் ஆணையாளர்.!

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சிறப்பாக பணிபுரிந்த 10 காவல் அதிகாரிகள், ஆளிநர்களை நேரில் அழைத்து சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும், சுற்றுக் காவல் ரோந்து பணிகள் அதிகரித்தல், சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள் மூலம் அதிகளவில் கண்காணித்தல், வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளுதல் மற்றும் பல்வேறு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், காவல் ஆளிநர்களை ஊக்குவிக்கும் வகையில், திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்து களவுப் பொருட்களை மீட்ட காவல் ஆளிநர்கள், குற்ற சம்பவங்களின்போது, விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கையும் களவுமாக கைது செய்யும் காவல் ஆளிநர்கள், ரோந்து வாகன காவல் குழுவினர்கள் மற்றும் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்யும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து அவர்களது பணியைப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வருகிறார்.

* மதுரவாயல் பகுதியில் வீடு புகுந்து திருட முயன்ற 2 பழைய குற்றவாளிகள் கைது.  1 இருசக்கர வாகனம் பறிமுதல்.

சென்னை, மதுரவாயல், MMDA காலனி, 7வது பிளாக், எண்.7/137 என்ற முகவரியல் வசித்து வரும்  கார்த்திக், வ/ 33 என்பவர்  கடந்த 22.01.2023 அன்று  தனது மனைவியுடன்  திருவொற்றியூரில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து கார்த்திக் T-4 மதுரவாயல் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

T-4 மதுரவாயல் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் திரு.P.சீனிவாசன், தலைமைக்காவலர் (த.கா.25738) திரு.விஜயகுமார், காவலர்கள் திரு.K.சீனிவாசகம் (PC 51431), திரு.சதாம் உசேன், (PC 56047), திரு.வெங்கடேசன் (PC 49458), திரு.சக்திவேல் (PC 55632), தலைமையிலான காவல் குழுவினர் சம்பவயிடத்திற்கு சென்று அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து தீவிர விசரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட 1.சத்யா, வ/22, த/பெ.கணேசன், எண்.1/4, காமதேனு நகர் மெயின் ரோடு, திருவேற்காடு, சென்னை அவரது தம்பி 2.விக்கி, வ/19, த/பெ.கணேசன் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்த 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட சத்யா மீது ஏற்கனவே திருட்டு மற்றும் வழிப்பறி உட்பட 10 வழக்குகள் உள்ளதும், விக்கி மீது 3 வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.

* அரும்பாக்கம் பகுதியில் காணாமல் போன மூதாட்டியை மீட்ட போலீசாருக்கு பாராட்டு.

சென்னை, அரும்பாக்கம், SBI Staff காலனி, கவிதா அப்பார்ட்மென்ட், என்ற முகவரியில் வசித்து வரும் திருமதி.ராஜம் (எ) ராஜேஸ்வரி, வ/77, க/பெ.குப்புசாமி என்பவர் கடந்த 27.01.2023 அன்று மதியம் முதல் காணவில்லை என அவரது பேரன் கிஷோர்குமார் K-8 அரும்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் Women Missing வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. K-8 அரும்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.பிரபு, உதவி ஆய்வாளர் (பயிற்சி) திரு.D.பிரகாஷ், ஆகியோர் விரைந்து செயல்பட்டு மேற்படி காணாமல் போன மூதாட்டி ராஜம் (எ) ராஜேஸ்வரி குறித்த விபரங்களை காவல் துறையினரின் வாட்சப் குரூப்களிலும் பகிர்ந்து மேற்படி மூதாட்டியை தேடிவந்தனர்.

இந்நிலையில் H-4 கொருக்குப்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.R.சங்கர், 27.01.2023 அன்று இரவு 10.30 மணியளவில் தண்டையார்பேட்டை காவல் நிலையம் அருகே  கண்காணிப்பு பணியிலிருந்த போது, அங்கு சுற்றி திரிந்த மேற்படி மூதாட்டி ராஜம் (எ) ராஜேஸ்வரியை கண்டுப்பிடித்து பத்திரமாக அரும்பாக்கம் போலீசாரிடம் ஒப்படைத்தார். அரும்பாக்கம் போலீசார் மூதாட்டி ராஜம் (எ) ராஜேஸ்வரியை பத்திரமாக அவரது பேரன் கிஷோர்குமாரிடம் ஒப்படைத்தனர்.

* காவல் பணிக்கு மிதிவண்டியை பயன்படுத்தி வரும் பெண் சிறப்பு உதவி ஆய்வாளர் திருமதி. புஷ்பராணிக்கு பாராட்டு.  

C-5 கொத்தவால்சாவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவில் பணிபுரியும் சிறப்பு பெண் உதவி ஆய்வாளர் திருமதி.புஷ்பராணி கடந்த 1997 ம் ஆண்டு தமிழக  காவல் துறையில் பணிக்கு சேர்ந்த நாள் முதல் இன்று வரை தனது காவல் பணிக்கு மிதிவண்டியை பயன்படுத்தி வருகிறார். சென்னை  பெருநகர காவல் ஆணையாளர் கடந்த 12.08.2022 அன்று இவரை பாராட்டி புதிய மிதிவண்டி வழங்கி ஊக்கப்படுத்தினர்.  இதனை தொடர்ந்து சென்னை பெருநகர காவல் ஆணையாளர் இன்று (31.01.2023) நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பராட்டினார். மேற்படி சம்பவங்களில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள், ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள் இன்று (31.01.2023) நேரில் அழைத்து சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

Related Stories: