ஜெர்மனியில் நடைபெற்ற குளிர்காலத் திருவிழா: நடுங்கும் குளிரில் இறங்கி நீச்சலடித்து கொண்டாட்டம்

பெர்லின்: ஜெர்மனியில் நடைபெற்ற குளிர்காலத் திருவிழாவில் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். ஜெர்மனியின் நியூபர்க் பகுதியில் பாயும் டாலூபி ஆறு உள்ளது. அந்த பாயும் ஆற்றில் இறங்கிய ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நடுங்க வைக்கும் குளிரில் உற்சாகமாக நீச்சலடித்து கொண்டாடினர். கொரோனாவால் 2 ஆண்டுகளாக குளிர்காலத் திருவிழா நடைபெற வில்லை.

2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு நடத்தப்பட்ட விழாவில் பல்வேறு வடிவிலான தெப்பங்களும் ஆற்றில் விடப்பட்டன. சில தெப்பங்களின் மீது ஏறி மக்கள் டைவ் அடித்தது அங்கிருந்தவர்களை ரசிக்க செய்தது.  நடுங்க வைக்கும் குளிரில் உற்சாகமாக நீச்சலடித்து, காதுகளுக்கு இனிய இசை கேட்டு நீண்ட நேரம் கொண்டாட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர். பிறகு கரை திரும்பியதும் அங்கு தயாராக இருந்த தன்னார்வலர்கள் சூடான பானங்களை அளித்து உற்சாகப்படுத்தினர்.

Related Stories: