தாம்பரம் மாநகராட்சியில் ரூ.7.25 கோடி பணிகளை எம்எல்ஏ, மேயர் ஆய்வு

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மற்றும் 5வது மண்டலங்களில் ரூ.7.25 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் பணிகளை தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் கோ.காமராஜ் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். முன்னதாக, தாம்பரம் மாநகராட்சி, 5வது மண்டலம், சேலையூர் பகுதியில் ரூ.2.50 கோடி மூலதன மானிய நிதியிலிருந்து கட்டப்பட்டு வரும் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அறிவுசார் மையம் மற்றும் 4வது மண்டலம் உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும், இரட்டை சாலையில் 15வது நிதி குழு மானியம் மூலம் ரூ.25 லட்சம் செலவில் நகர்ப்புற நலவாழ்வு மையம், பெருங்களத்தூர்,

காமராஜர் சாலையில் மூலதன மானிய நிதியிலிருந்து ரூ.2 கோடி செலவில் வணிக வளாகம், பெருங்களத்தூர் பகுதியில் ரூ.2.50 கோடி செலவில் எரிவாயு தகன மேடை ஆகிய பணிகளை தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் கோ.காமராஜ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வரும் பணிகளையும் விரைந்து முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். ஆய்வின்போது, மண்டல குழு தலைவர்கள் டி.காமராஜ், எஸ்.இந்திரன், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், செயற்பொறியாளர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: