பெண் சீடர் பலாத்கார வழக்கு சாமியார் அசாராம் பாபு குற்றவாளி: தண்டனை இன்று அறிவிப்பு

காந்திநகர்: ஆசிரமத்தில் இருந்த பெண் சீடரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் அசாராம் பாபு குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.  குஜராத்தின் அகமதாபாத்தில் அசாராம்பாபுவின் ஆசிரமத்தில் இருந்த பெண் சீடரை கடந்த 2001ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை பல முறை சாமியார் அசாராம் பாபு பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த 2013ல் வழக்கு பதிவு செய்யபட்டது.  

வழக்கை விசாரித்த காந்திநகர் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி டிகே சோனி, அசாராம் பாபு குற்றவாளி என்று நேற்று தீர்ப்பளித்தார். மேலும் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் சாமியாரின் மனைவி உட்பட 6 பேரை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. வழக்கில் அசாராம் பாபுவிற்கான தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படும்.

Related Stories: