திமுக மாணவர் அணி அமைப்பாளர்களுக்கு வரும் 4, 5 தேதிகளில் நேர்காணல்: செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்எல்ஏ அறிவிப்பு

சென்னை: திமுக மாணவர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்களுக்கு வருகிற 4, 5ம் தேதிகளில் நேர்காணல் நடைபெறும் என்று அணியின் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்எல்ஏ அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திமுக மாணவர் அணியின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்-துணை அமைப்பாளர்கள் பொறுப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, பிப்ரவரி 4ம் தேதி (சனிக்கிழமை) மற்றும் 5ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில், சென்னை, அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நேர்காணல் நடைபெறும். 4ம் தேதி காலை 8.30 மணி முதல் 10 மணி வரை சென்னை தெற்கு, சென்னை தென்மேற்கு மாவட்டத்துக்கும், காலை 10 மணி- 11 மணி வரை திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு மாவட்டம்,

காலை 11- 1.30 மணி வரை திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டம், மதியம் 3- 4.30 மணி வரை திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மத்திய, திருவள்ளூர் மேற்கு மாவட்டம், மாலை 4.30 -5.30 மணி வரை காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்துக்கும் நேர்காணல் நடைபெறும். 5ம் தேதி காலை 8.30- 9.30 மணி வரை விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு மாவட்டம், காலை 9.30- 10.30 மணி வரை கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், காலை 10.30 -12.30 மணி வரை சென்னை மேற்கு மாவட்டம், மதியம் 12.30- 1.30 மணி வரை சென்னை வடகிழக்கு, மதியம் 2.30 மணி முதல் சென்னை வடக்கு, சென்னை கிழக்கு மாவட்டத்துக்கான நேர்காணல் நடைபெறும்.

 மாணவர் அணி பொறுப்புகளுக்கு விண்ணப்பித்த தகுதியான விண்ணப்பதாரர்கள், தங்களது விண்ணப்பப் படிவத்தின் நகல் மற்றும் கல்வி, பிறப்பு உள்ளிட்ட சான்றிதழ்களுடன் குறித்த நேரத்திற்கு வந்து, நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டும். மாணவர் அணி பொறுப்புக்கு இதுவரை விண்ணப்பம் செய்யாதவர்கள், புதிதாக விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ் மற்றும் இதர ஆவணங்களுடன், தங்கள் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் நேர்காணல் நடைபெறும் மையத்திற்கு நேரில் வந்து, விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து நேர்காணலில் பங்கேற்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: