ஜி20 பிரதிநிதிகளுக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு

சென்னை: சென்னையில் இன்று முதல் வரும் பிப்ரவரி 2ம் தேதிவரை 3 நாட்கள் ஜி-20 மாநாடு நடைபெற இருக்கிறது. இதற்காக சென்னை விமான நிலையத்தில் நேற்று காலை 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் வந்து இறங்கினர். மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு தமிழ்நாடு கிராமிய பண்பாட்டின்படி மேளதாளங்கள் முழங்க, பொய்க்கால்குதிரை மற்றும் தப்பாட்டங்களுடன் அரசு அதிகாரிகளால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் செல்ல இருந்த வாகனங்களை பாதுகாப்பு போலீசார் சோதனை நடத்தி அவர்கள் தங்குமிடங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர். முன்னதாக, சென்னை சர்வதேச விமான நிலைய வளாகத்தில் வருகை பகுதியில் மலர்களால் ஆன அழகிய பூக்கோலங்கள், வரவேற்பு பதாகைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு இருந்தன.

Related Stories: