ஈவிகேஎஸ்.இளங்கோவன் வெற்றிக்கு களப்பணியாற்றுவோம்: பொன்குமார் அறிக்கை

சென்னை: விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் அறிக்கை: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றிக்கு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி ஆதரவளித்து களப்பணியாற்றும். இதற்காக கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் தேர்தல் பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தேர்தலில் தொகுதியில் உள்ள கட்டுமான தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களை வாக்களிக்க செய்திட விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி திண்ணை பிரசாரம் மேற்கொள்ளும்.

Related Stories: