பாக். நாடாளுமன்ற இடைத்தேர்தல் 33 தொகுதிகளிலும் இம்ரான் போட்டி

லாகூர்: பாகிஸ்தானில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற இடைத்தேர்தலில் 33 தொகுதிகளிலும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வேட்பாளராக போட்டியிடுவார் என்று பாகிஸ்தான்  தெக்ரிக் இ இன்சாக் கட்சி அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் 33 நாடாளுமன்ற தொகுதிகளில் மார்ச் 16ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அந்நாட்டின் தேர்தல் ஆணையம் வெள்ளியன்று அறிவித்தது. இந்நிலையில் பாகிஸ்தான் தெக்ரின் இ இன்சாப் கட்சியின் துணை தலைவர் மற்றும் முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி நேற்று முன்தினம் லாகூரில் நிருபர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய ஷா முகமது குரேஷி கூறுகையில்,‘‘வருகின்ற நாடாளுமன்ற இடைத்தேர்தலில், 33 தொகுதிகளிலும் பாகிஸ்தான் தெக்ரிக் கட்சியின் ஒரே வேட்பாளராக இம்ரான் கான் போட்டியிடுவார். முன்னாள் பிரதமர் இம்ரான் தலைமையில் நடந்த இடைத்தேர்தல் தொடர்பாக நடந்த கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

Related Stories: