வேட்பாளர் பற்றி தெரியாது நாங்கள் ரகசியம் பேசினோம்: லகலக மாஜி சஸ்பென்ஸ்

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று காலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு முடிந்து வெளியே வந்த அவரிடம், எடப்பாடியிடம் என்ன பேசினீர்கள் என நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், அது ரகசியம்; அதை வெளியே சொல்ல முடியாது, என்றார். தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் எப்போது அறிவிக்கப்படுவார் என கேட்டபோது, எடப்பாடி வீட்டின் முன்புதானே நிற்கிறீர்கள், அவரிடமே கேளுங்கள் என்றார். மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக, நல்ல தீர்ப்பாக வரும், என கூறி விட்டு காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார். அதேபோல் கலசப்பாக்கம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ பன்னீர் செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகளும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

Related Stories: