சென்னையில் ஜி- 20 கல்வி செயற்குழு கூட்டம் நடைபெறுவதை ஒட்டி 3 நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை

சென்னை: ஜி 20 நாடுகளின் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் டிசம்பர் 2022 முதல் நவம்பர் 2023 வரை 200க்கும் மேற்பட்ட நிகழ்வுகள், கருத்தரங்குகள் இந்தியாவில் உள்ள 56 நகரங்களில் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, தஞ்சை, கோவை உள்ளிட்ட இடங்களில் ஜி 20க்கான நிகழ்வுகள் நடத்தப்படுவதற்கு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜி20 மாநாட்டையொட்டி சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.

பாதுகாப்பு காரணமாக முதல் ஜி - 20 கல்வி செயற்குழு கூட்டங்கள் , நிகழ்வுகள் நாளை முதல் பிப்ரவரி.2 வரை சென்னை, மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. ஜி- 20  மாநாட்டில் 29 வெளிநாடுகள் மற்றும் 15 பன்னாட்டு நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். சென்னை நட்சத்திர விடுதிகளில் பிரதிநிதிகள் தங்கி ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் நடக்கும் கருத்தரங்கில் பங்கேற்கின்றனர். பாதுகாப்பு கருதி பிரதிநிதிகள் தங்கும் இடங்கள், பயண வழித்தடங்களில் நாளை முதல் 2-ம் தேதி வரை ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Related Stories: