ஆஸ்பிரன் கார்டன் பகுதியில் ரூ.6.20 கோடி மதிப்பில் புதிதாக பாலம் அமைக்கும் பணி: அமைச்சர் சேகர்பாபு, தயாநிதி மாறன் அடிக்கல் நாட்டினர்

சென்னை: இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர்  சேகர்பாபு, மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் அண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட ஆஸ்பிரன் கார்டன் பகுதியில் ரூ.6.20 கோடி மதிப்பில் புதிதாக பாலம் அமைக்கும் பணியினை இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்கள்.

இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள், மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர்  தயாநிதி மாறன் ஆகியோர் பெருநகர சென்னை மாநகராட்சி, அண்ணாநகர் மண்டலம், வார்டு-98க்குட்பட்ட ஆஸ்பிரன் கார்டன் பகுதியில் ஓட்டேரி கால்வாயின் குறுக்கே ஆஸ்பிரன் கார்டன் 2ஆவது தெரு மற்றும் கீழ்ப்பாக்கம் கார்டன் தெருவை இணைக்கும் இடத்தில்  ரூ.6.20 கோடி மதிப்பில் புதிதாக பாலம் அமைக்கும் பணியினை இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்கள்.

உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ், அண்ணாநகர் மண்டலம், வார்டு-98க்குட்பட்ட ஆஸ்பிரன் கார்டன் பகுதியில் ஓட்டேரி கால்வாயின் குறுக்கே ஆஸ்பிரன் கார்டன் 2ஆவது தெரு மற்றும் கீழ்ப்பாக்கம் கார்டன் தெருவை இணைக்கும் இடத்தில் அமைந்துள்ள குறுகலான கீழ்மட்டப் பாலத்தை இடித்துவிட்டு, ரூ.6.20 கோடி மதிப்பீட்டில் 17.60 மீ. நீளம், 11.50 மீ. அகலம் (இருபுறமும் நடைபாதையின் அகலம் 1.5 மீ. உட்பட) கொண்ட புதிய பாலம் அமைக்கும் பணி இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: