இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒன்டே: 5 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்ரிக்கா வெற்றி

புளோம்பாண்டீன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென்ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் தென்ஆப்ரிக்கா வென்ற நிலையில், 2வது போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற தென்ஆப்ரிக்கா பவுலிங்கை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 50 ஓவரில், 7 விக்கெட் இழப்பிற்கு 342 ரன் எடுத்தது.

ஹாரி புரூக் 80, கேப்டன் பட்லர் 94, மொயின் அலி 51 ரன் அடித்தனர். பின்னர் களம் இறங்கிய தெ.ஆ. அணியில் கேப்டன் பவுமா 109, மார்க்ரம் 49, டேவிட் மில்லர் நாட்அவுட்டாக 58 ரன் அடித்தனர். 49.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 347 ரன் எடுத்த தென்ஆப்ரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2-0 என தொடரை கைப்பற்றியது. பவுமா ஆட்டநாயகன் விருது பெற்றார். கடைசி போட்டி நாளை மறுநாள் நடக்கிறது.

Related Stories: