தனியார் பள்ளி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை: மக்கள் அதிர்ச்சி

நாமக்கல்: நாமக்கல்லில் தனியார் பள்ளி விடுதியில் 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சென்னையை சேர்ந்த தியாகு என்பவரது மகள் சுவாதி 17வயது. இவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இன்று அதிகாலையில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் சுவாதியும் சென்று படித்துவிட்டு மீண்டும் விடுதி அறைக்கு வந்துள்ளார். இதனையடுத்து மாணவி சுவாதி பள்ளிக்கு வரவில்லை. உடனே விடுதி அறைக்கு சென்று பார்த்தபோது உள்தாழிட்டு இருந்துள்ளது.

அதனை உடைத்து பார்த்தபோது மாணவி சுவாதி தூக்கில் தொங்கிய படி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர் உடனடியாக ராசிபுரம் காவல்துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்று விசாரணை நடத்தி வருகின்றனர். 12-ம் வகுப்பு மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Related Stories: