மேட்டூர் அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் தீ விபத்து: 3 பெண்கள் உட்பட 11 பேருக்கு லேசான தீக்காயம்

மேட்டூர்: மேட்டூர் அருகே ஓடும் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் 3 பெண்கள் உள்பட 11 பேர் காயமடைந்துள்ளனர். கோவையில் இருந்து பெங்களூருக்கு சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து ஒன்று சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த  புதுச்சாம்பள்ளி என்ற இடத்தில் வந்து கொண்டு இருந்தது. நள்ளிரவு ஒன்றரை மணியளவில் பேருந்தின் பின்புறத்தில் திடீரென புகை கிளம்பியுள்ளது.

இதனை கவனித்த பயணிகள் ஓட்டுனரிடம் கூறியதும் ஓட்டுநர் உடனடியாக பேருந்தை சாலையோரமாக நிறுத்தினார். தீ விபத்தால் அச்சமடைந்த பயணிகள் முண்டியடித்து கொண்டு கீழே இறங்கினார்கள். சிலர் அலறி கொண்டு ஜன்னல் வழியாக குதித்தனர். இதற்குள் தீ பேருந்து முழுவதும் பரவி கொழுந்து விட்டு ஏறிய தொடங்கியது.

தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் அரைமணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். 3 பெண்கள் உட்பட 11 பயணிகளுக்கு லேசான தீ காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்தில் பயணிகள் சிலரது லேப்டாப் உள்ளிட்ட உடைமைகள் எரிந்து சேதமடைந்தன.

Related Stories: