ஆளுநரை கண்டித்து பாமக போராட்டம்: அன்புமணி அறிவிப்பு

தர்மபுரி: தர்மபுரியில் நேற்று பல்வேறு இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், பாமக தலைவர் அன்புமணி எம்.பி., கலந்து கொண்டார்.

முன்னதாக அவர் அளித்த பேட்டி:

தமிழ்நாடு அரசு மதுவை ஒழிக்க வேண்டும். அல்லது படிப்படியாக குறைக்க வேண்டும். கடந்த ஆட்சியில் சில மதுக்கடைகள் மூடப்பட்டன. அதற்கு காரணம் பாமக தான். ஆன்லைன் சூதாட்டத்தினால் தமிழகத்தில் 12 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிப்பதற்கான சட்ட மசோதாவில், ஆளுநர் கையெழுத்திட வேண்டும்.

இல்லையென்றால், பாமக போராட்டம் நடத்தும். எங்களுக்கு இடைத்தேர்தலில் நம்பிக்கை இல்லை. அதனால், யாருக்கும் எந்த பயனுமே இருக்கப் போவதில்லை. பாமகவை பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். இதுதொடர்பாக திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: