மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் 10-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் சிட்சிபாஸை 6-3, 7-6, 7-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
மெல்போர்னில் நடைபெற்ற இந்த இறுதி போட்டி 2மணி நேரம் 56 நிமிடம் நீடித்த நிலையில் இறுதியில் முடிவில் ஜோகோவிச் 6-3, 7-6, 7-6 என்ற செட் கணக்கில் சிட்சிபாஸை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன்படி ஜோகோவிச் 10வது முறையாக ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.