முதல்வரின் உழைப்புக்கு ஊக்குசக்தி: அமைச்சர் எ.வ.வேலு வேண்டுகோள்

ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பெரியசேமூர் பகுதி தேர்தல் பணிமனையை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்தனர். அப்போது பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், திராவிட மாடல் ஆட்சியில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதே இலக்கு. முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்காக 24 மணி நேரமும் ஓய்வு இன்றி உழைத்து வருகின்றார். முதல்வரின் உழைப்பிற்கு ஊக்குசக்தியாக இத்தேர்தல் வெற்றி அதிக வாக்குகள் வித்தியாசத்தோடு இருக்க வேண்டும் என்றார்.

Related Stories: